இந்தியா

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் யார்? பாஜக இன்று முடிவு

DIN

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட இருக்கும் வேட்பாளர் குறித்து பாஜக திங்கள்கிழமை முடிவு செய்யவுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் 15}ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, அந்தப் பதவிக்கு ஆகஸ்ட் மாதம் 5}ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான கடைசி நாள் வரும் 18}ஆம் தேதியாகும்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில், தில்லியில் பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் பதவியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் தேர்வு செய்யப்படவுள்ளார். இந்தத் தகவலை பாஜக ஆட்சிமன்றக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் இருக்கும் 790 எம்.பி.க்களும் கலந்து கொண்டு வாக்களிப்பர். அதன்படி, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அக்கூட்டணியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு 500 முதல் 550 வாக்குகள் வரையிலும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மணிப்பூர் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா உள்ளிட்டோரில் யாராவது ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று
தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்தப் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என்று வெங்கய்ய நாயுடு ஏற்கெனவே மறுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

SCROLL FOR NEXT