இந்தியா

பாட்னா விமான நிலையத்தில் லாலு, ராப்ரிக்கு சிறப்பு அனுமதி சலுகை ரத்து

DIN

பிகார் மாநிலம், பாட்னா விமான நிலையத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அனுமதி சலுகையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
முன்னதாக, பாட்னா விமான நிலையத்தில் தங்களது வாகனத்திலேயே விமானம் வரை செல்வதற்கு இருவருக்கும் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சலுகை பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விமானப் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு (பிசிஏஎஸ்) அதிகாரி ஒருவர், பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது:
பாட்னா விமான நிலையத்தில், விமானம் வரை தங்களது வாகனத்திலேயே செல்வதற்கான சிறப்பு சலுகை, லாலுவுக்கும் அவரது மனைவி ராப்ரி தேவிக்கும் கடந்த 2009}ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. அந்த சலுகையை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் இருந்து விமானப் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவுக்கு வெள்ளிக்கிழமை கடிதம் வந்தது. இந்த முடிவை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பாட்னா விமான நிலையத்தில் லாலுவுக்கும் ராப்ரி தேவிக்கும் அளிக்கப்பட்டு வந்த சலுகை திரும்பப் பெறப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT