இந்தியா

நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிக்கு மாற்ற நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஒப்புதல்

DIN

நிதியாண்டின் தொடக்கத்தை ஏப்ரல் மாதத்துக்குப் பதிலாக ஜனவரி மாதத்துக்கு மாற்றுவதற்கு நிதி விவகாரத்துக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரி மாதத்துக்கு மாற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக, வீரப்ப மொய்லி, பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரி மாதத்துக்கு மாற்ற வேண்டும் என்ற யோசனை, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது மத்திய அரசு வெளியிடக்கூடும். அதற்கேற்ப, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதையும் பிப்ரவரி மாதத்தில் இருந்து நவம்பருக்கு மத்திய அரசு மாற்றக் கூடும்.
இவ்வாறு நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிக்கு மாற்றுவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் அனைத்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். இதில், அவசரம் காட்டக் கூடாது.
நிதியாண்டின் தொடக்கத்தை உடனடியாக ஜனவரி மாதத்துக்கு மாற்றினால், அது, பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, அதற்கேற்ப சட்ட விதிகளிலும், வரவு}செலவு கணக்கு தாக்கல் செய்யப்படும் நடைமுறைகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT