இந்தியா

விஞ்ஞானி யஷ் பால் காலமானார்

DIN

புதுதில்லி: விண்வெளி விஞ்ஞானி யஷ் பால்(90) நேற்று (ஜூலை 24) காலை உடல் நலக்குறைவால், நொய்டாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

அறிவியல் துறையில் மற்றும் அண்டவியல் கதிர்கள், உயர் ஆற்றல் இயற்பியல், வான் இயற்பியல் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்கான வளர்ச்சியில் யஷ் பாலின் கணிசமான பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை நிறுவுவதில் அவர் கருவியாக இருந்து செயல்பட்டவர்.  

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் "திருப்பு முனை" என்ற தலைப்பில் பிரபலமான அறிவியல் நிகழ்ச்சிகளை வழங்கி உள்ளார்.

2000 ஆம் ஆண்டு அறிவியல் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு மற்றும் 2006 ஆம் ஆண்டு தி மேகனாத் சாஹா பதக்கம் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றார்.

2007 முதல் 2012 வரை புது தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக பணியாற்றினார். 2009 இல் உயர் கல்விக்கு சீர்திருத்தங்களை பரிந்துரைக்கும் குழுவிற்கு தலைமை தாங்கினார்.

இவருக்கு 1976 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2013 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

அவரது உடல் இன்று மாலை 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT