இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கய்யா நாயுடுவுக்கு நேரில் சென்று முதல்வர் பழனிசாமி ஆதரவு!

வரும் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவுக்கு நேரில் சென்று முதல்வர் பழனிசாமி ஆதரவு தெரிவித்தார்.

DIN

புதுதில்லி: வரும் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவுக்கு நேரில் சென்று முதல்வர் பழனிசாமி ஆதரவு தெரிவித்தார்.

தில்லியில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி தில்லி சென்றிருந்தார். அவருடன் தமிழக அமைச்சர்களும் சென்றிருந்தனர். நிகழ்வு முடிந்த பின்னர், துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மாநில அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி, துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவை நேரில் சென்று சந்தித்தார்.

தனிப்பட்ட சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது பழனிசாமி கூறியதாவது:

மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்யா நாயுடு அவர்கள் தமிழகத்தின் மீது பற்றும் பாசமும் உடையவர். அத்துடன் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதையும், நட்புணர்வும் கொண்டிருந்தவர். அத்துடன் தென்னிந்நிதியாவைச் சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது கூடுதல் மகிழ்ச்சியினை அளிக்கிறது. அவருக்கு எங்கள்முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு பழனிசாமி பேசினார். அதிமுகவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெங்கய்யா நாயுடு பின்னர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT