இந்தியா

யெச்சூரியை மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக்க மார்க்சிஸ்ட் திட்டம்

DIN

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக்குவது குறித்து அக்கட்சியின் தலைமைக் குழு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
மார்க்சிஸ்ட் விதிகளின்படி இரண்டு முறைக்கு மேல் ஒருவர் மாநிலங்களவை எம்.பி.யாக முடியாது. அதன்படி, சீதாராம் யெச்சூரிக்கு இரு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து யெச்சூரி எம்.பி.யாக்கப்பட்டுள்ளதால் அங்கு காலியாகும் இடத்துக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம்.
அந்த மாநில பேரவையில் இடதுசாரி முன்னணிக்கு 32 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால், மாநிலங்களவை எம்.பி.யாக ஒருவரைத் தேர்வு செய்ய அந்த எண்ணிக்கை போதாது. இருப்பினும், காங்கிரஸின் ஆதரவுடன் யெச்சூரியை மூன்றாவது முறையாக எம்.பி.யாக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழுக் கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. அதில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தலைமைக் குழு உறுப்பினர்கள் நால்வர் சீதாராம் யெச்சூரியை மூன்றாவது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தனர்.
அதேவேளையில், கேரளத்தைச் சேர்ந்த தலைமைக் குழு உறுப்பினர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் ஒத்துழைப்புடன் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரை எம்.பி.யாக்குவதை ஏற்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கட்சியின் தலைமைக் குழு விரைவில் முடிவெடுக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT