இந்தியா

டிக்கெட் இப்போ.. பணம் இரண்டு வாரத்திற்கு அப்புறம்: ஐஆர்சிடிசியின் அட்டகாச சலுகை! 

DIN

புதுதில்லி: நீங்கள் இனி ட்ரெய்ன் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதானால், முதலில் இந்திய ரயில்வேயின் 'ஐஆர்சிடிசி' இணையதளத்தில் டிக்கெட் முன் பதிவு செய்து விட்டு, 14 நாட்கள கழித்து பணம் செலுத்தலாம் என்ற புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.

இந்த புதிய வசதி குறித்து இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) லிமிடெட்டின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்திய ரெயிவே துறை 'இப்போது டிக்கெட் வாங்குங்கள் பின்னர் பணம் செலுத்துங்கள் என்ற புதிய சேவையை தொடங்க உள்ளது. இந்த சேவையானது அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும் பொருந்தும். 

இந்த சேவையைத் தேர்வு செய்ய விரும்புவோர் தங்களது பெயர், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், பான் அட்டை எண் அல்லது ஆதார் அட்டை எண் விவரங்களை வழங்க வேண்டும். ஐஆர்சி டிசி  மும்பையை சேர்ந்த  இபே நிறுவனத்துடன் சேர்ந்து இந்த சேவையை வழங்க உள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் நிங்கள் விரும்பும் எக்பிரஸ் ரெயிலுக்கு உரிய டிக்கெட்டை இப்போது பதிவு செய்து கொள்ளலாம் பின்னர் 14 நாட்கள் கழித்து நீங்கள் அதற்கு உரிய பணத்தை 3.5 சதவிகித சர்வீஸ் கட்டணத்துடன் செலுத்தலாம்.

தற்பொழுது இந்த சேவை இடிக்கெட்டுக்கு மட்டுமே பொருந்தும்.படிப்படியாக இந்த திட்டம் விரிவு படுத்தப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT