ஜெய்ப்பூரில் வினோதமான விபத்து: காருக்குள் சிக்கிய குதிரை
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிக வினோதமான சாலை விபத்து ஒன்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிக வினோதமான சாலை விபத்து ஒன்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டது.
இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து அல்ல அது, காரும், வேகமாக ஓடிக் கொண்டிருந்த குதிரையும் ஒரே சாலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போது நேரிட்ட மிக மோசமான விபத்தாக அது அமைந்தது.
ஜெய்ப்பூர் கிளப் அருகே காரும் குதிரையும் மோதிக் கொண்ட வேகத்தில் குதிரை காரின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே சிக்கிக் கொண்டது.
Advertisement
முதலில் இந்த விபத்தைப் பார்த்த பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் திகைத்து நின்றுவிட்டனர். பிறகுதான், காருக்குள் சிக்கிய ஓட்டுநரையும், குதிரையையும் மீட்க முயற்சித்தனர். இந்த விபத்தில் ஓட்டுநருக்கும் குதிரைக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.