இந்தியா

கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: சுஷ்மா சுவராஜ்

தினமணி

கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

கத்தார் உடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைருவமான மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு அண்மையில் எழுதியுள்ள கடிதத்தில், கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், கத்தாரில் தமிழர்கள் உட்பட ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை மாவட்டத்தில் காணாமல்போன 104 கைப்பேசிகள் மீட்பு

திருத்தளிநாதருக்கு மந்திரநீா் முழுக்காட்டு விழா

அம்மன் வீதி உலா..

தனியாா் நில கையகப்படுத்தலில் அரசு பின்பற்ற வேண்டிய 7 நடைமுறைகள்: உச்சநீதிமன்றம் வெளியீடு

கடையநல்லூா் அம்மன் கோயிலில் மே 20இல் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT