இந்தியா

அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம்: வெங்கய்ய நாயுடு

DIN

அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். அதிமுகவின் இரு அணிகளும் ஒற்றுமையுடன் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
சென்னை வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் மத்திய அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை திறந்து வைத்துப் பார்வையிட்டார். அதன் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியவது:
மத்தியில் உள்ள பாஜக அரசு ஊழல், முறைகேடுகள் இல்லாமல் 3 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கும் மோடி அரசே தொடர மக்கள் விரும்புகின்றனர்.
இப்போது தேர்தல் நடைபெற்றாலும் மோடியே மீண்டும் பிரதமராக வருவார். நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சி நடத்தி வருகிறோம். மத்திய அரசே மாநிலங்களுக்குச் சென்று சேவை செய்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மத்திய அரசு தனது வருவாயில் 42 சதவீதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கிறது.
மாநில அரசுடன் இணைந்து பணியாற்றவே தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. மாநிலத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு உதவும். மத்திய அமைச்சராகத் தாம் இருந்தாலும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்கு வந்து, மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததை சிலர் விமர்சித்துள்ளனர்.
இதுவரையில் 22 மாநிலங்களில் நாங்கள் ஆய்வு நடத்தியுள்ளோம். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் நான் தலைமைச் செயலகம் வந்து சந்தித்து ஆலோசித்துள்ளேன். இதற்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது.
கருப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரச செயல்பட்டு வருகிறது. சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், சைப்ரஸ் உளளிட்ட நாடுகளோடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாராவது முறைகேட்டில் ஈடுபட்டால் எங்களுக்குத் தகவல் கிடைக்கும்.
835 உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பண வீக்கம் 4 சதவீதமாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் பிரச்னையை காங்கிரஸ் கட்சி அரசியலாக்கப் பார்க்கிறது. நாட்டில் ஊழல், வறுமையை ஒழித்து, வளர்ச்சியடைய செய்வது மட்டுமே எங்களது நோக்கம். மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை. மாடுகளை வாகனங்களில் கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்தவே வலியுறுத்தியது. உணவு சாப்பிடுவது என்பது மக்களின் தனிப்பட்ட விருப்பம். இதில், மத்திய அரசு தலையிடாது.
சமீபத்தில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளனர். மக்கள் அவர்களைப் புறக்கணித்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். அதிமுகவின் இரு அணிகளும் ஒற்றுமையுடன் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழக விவசாயிகளின் பிரச்னைகளுக்கு மாநில அரசுதான் பேசித் தீர்வு காண வேண்டும்.
குடியரசுத் தலைவர் தேர்வுக்காக எல்லா கட்சியினரையும் அணுகுவோம். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் மதச்சார்பற்ற வேட்பாளராக இருப்பார் என்றார் வெங்கய்ய நாயுடு.
இந்தச் சந்திப்பின்போது, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT