இந்தியா

இரு கால்கள் கொண்ட அதிசயப் பாம்பு

DIN

தெலங்கானாவில் விவசாய நிலம் ஒன்றில் பிடிபட்ட பாம்புக்கு இரு கால்கள் இருந்தன. தெலங்கானா மாநிலம், பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் ராம்பூர் கிராமத்தில் வசிப்பவர் ராமுலு. இவரது விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பாம்பு பிடிபட்டது.

அதன் உடல் நடுவில் இரு கால்களும், அதில் 8 கூரிய நகங்களும் இருந்தது தெரியவந்தது. இந்த அரிய வகை பாம்பை ராமுலு, மாவட்ட வனத்துறை அதிகாரி ராம்பாபுவிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து ராம்பாபு கூறுகையில், ' இது போன்ற பாம்புகள் பல்லாண்டுகளுக்கு முன் இருந்தன. இதுகுறித்து முழு விவரங்களை தெரிந்து கொள்வதற்காக இந்த பாம்பு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார். இரு கால்கள் கொண்ட அதிசய பாம்பை அக்கிராம மக்கள் அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT