இந்தியா

மணிப்பூர் மாநிலத்தில் கன மழை; அபாய நிலையில் ஆறுகள்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆறுகள் அபாய அளவை தாண்டி ஓடுகின்றன.

ANI


இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆறுகள் அபாய அளவை தாண்டி ஓடுகின்றன.

இம்பால் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக கரையோர கிராமங்கள் மூழ்கியுள்ளன. 250 வீடுகளும், 1000 ஏக்கர் விவசாய நிலங்களும், மீன் பண்ணைகளும் வெள்ளத்தில் நாசமாகின.

மாநிலத்தில் ஓடும் மிகப் பெரிய ஆறுகள் அனைத்துமே அபாய அளவை தாண்டி ஓடுவதால், பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இம்பால் ஆற்றின் தெற்கு மற்றும் மேற்குக் கரை மாவட்டங்களைச் சேர்ந்த 250 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மிக மோசமான பகுதிகளில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களும், அரசும் இணைந்து நிவாரண முகாம்களை திறந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT