இந்தியா

ராம்நாத் கோவிந்துக்கு நிதீஷ், மாயாவதி வரவேற்பு

DIN

: மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு, அக்கூட்டணியில் இடம்பெறாத நிதீஷ்குமார், மாயாவதி, ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஜூலை 17-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஹரியாணா முதல்வர் கட்டர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
'கோவிந்துக்கு தெலுங்கு தேசம் கட்சி முழு ஆதரவையும் அளிக்கும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அவருடன் பிரதமர் தொலைபேசியில் பேசும்போது, ராம்நாத் கோவிந்துக்கு திரிணமூல் காங்கிரஸின் ஆதரவையும் பெற்றுத் தருமாறு முதல்வரிடம் கோரினார்' என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில், 'குடியரசுத் தலைவர் பதவிக்கு ராம்நாத் கோவிந்தைத் தேர்வு செய்தது மோடியின் அரசியல் சாணக்கியத்தைக் காட்டுகிறது. அவருக்கு நாங்கள் முழு ஆதரவையும் அளிப்போம்' என்றார்.
நிதீஷ்குமார் மகிழ்ச்சி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு அந்த மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ்குமார் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
மாயாவதி ஆதரவு?: இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், 'குடியரசுத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் ஒரு தலித்தை நிறுத்தாத பட்சத்தில், கோவிந்துக்கு ஆதரவு தருவது குறித்து எங்கள் கட்சி பரிசீலிக்கும்' என்று தெரிவித்தார்.
ஜெகன்மோகன் ஆதரவு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை பாஜக தலைவர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்குமாறு அவர் கோரினார். அதற்கு 'பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு நாங்கள் முழு ஆதரவை அளிப்போம்' என்று ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT