இந்தியா

நீதிபதியால் சிறைக்குச் சென்ற 576 அரசு ஊழியர்கள்: அதிகரிக்கும் லஞ்ச குற்றச்சாட்டுகளின் எதிரொலி!

DIN

உத்திர பிரதேசத்தில் உள்ள லக்னோவில் அரசு ஊழியர்கள் அதிகமாக லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தொடர்ச்சியாக வந்த புகார்களின் காரணமாக மாவட்ட நீதிபதி ஒருவர் அரசு அதிகாரிகளை லஞ்சம் வாங்குவதால் என்ன நிலைமைக்கு ஆளாகுவார்கள் என்பதைக் காட்ட, ஏற்கனவே இதுபோன்ற லஞ்சம் வாங்கிய சர்ச்சையில் சிக்கி கைதாகி சிறைத் தண்டனை அனுபவிக்கும் முன்னாள் அரசு ஊழியர்களிடம் பேச அழைத்துச் சென்றுள்ளார்.

உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ரவீந்தர குமார் என்பவர் பரூக்காபாத் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். அரசு ஊழியர்கள் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக தொடர்ச்சியாக வந்த புகார்களையும், குற்றச்சாட்டுகளை பொறுக்கமுடியாத இவர் 576 அரசு ஊழியர்களை மாவட்ட சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

உள்ளாட்சி துறை ஊழியர்கள், பஞ்சாயத்து அதிகாரிகள், வருவாய் துறையினர், நியாய விலைக் கடை ஊழியர்கள் மற்றும் பல அரசு திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகள் என மொத்தம் 576 ஊழியர்களை இவர் சிறைச்சாலைக்கு கூட்டிச் சென்றார். அங்கு ஏற்கனவே முறைகேடுகளில் சிக்கி தண்டனை அனுபவிப்பவர்கள் 88 அரசு ஊழியர்கள் ஆவர்.

லஞ்சம் வங்கி சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களிடம் இவர்கள் பேசுவதன் மூலம், லஞ்சம் வாங்கினால் வாழ்வின் பின்னாளில் எவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து, இனி லஞ்சம் வாங்குவதை இவர்கள் தவிர்க்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று நீதிபதி ரவீந்திர குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு நிருபிக்கப்பட்ட ஆறு அரசு ஊழியர்களை இவர் பணியிடை நீக்கம் செய்து தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT