முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:48 PM
பகிர்:

சோப்பூர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூர் மாவட்டம் பாஸ்பல்பூர் பகுதியில் இன்று புதன்கிழமை காலை பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும், உயிரிழந்த பயங்கரவாதிகளிடமிருந்து இரண்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

சோபூர் போலீஸார், எஸ்ஜிஓ மற்றும் ராணுவத்தின் 22 ஆர்ஆர் இணைந்து இந்த பயங்கரவாத நடவடிக்கையை முறியடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.