இந்தியா

குடியரசுத் தலைவர் பதவி, பெருமையை காப்பேன்: ராம்நாத் கோவிந்த் பேட்டி

DIN

புதுதில்லி: குடியரசுத் தலைவர் பதிவி கட்சி, ஆட்சிக்கும் அப்பாற்பட்டது; அந்த பதவிக்கான பெருமையை காப்பேன் என்று மனுதாக்கல் செய்த பின் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் புடைசூழ, மாநில முதல்வர்கள் 20 பேர் முன்னிலையில் இன்று ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை நாடாளுமன்ற தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்தார்.

மனுதாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் ராம்நாத் கோவிந்த் கூறுகையில், “நான் ஆளுநர் ஆனது முதல், எந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் அல்ல. குடியரசுத் தலைவர் பதவி கட்சி, ஆட்சிக்கும் அப்பாற்பட்டது என்றார்.

மேலும், அரசியல் கடந்த குடியரசுத் தலைவர் பதவியை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பதவி காலத்தில் கட்சி சார்பின்றி செயல்படுவேன்.

உயர் மதிப்புடைய குடியரசுத் தலைவர் மாண்பை காக்கும் வகையில் எந்த கட்சிக்கும் சாதகமாக இல்லாமல் என்னால் முடிந்தவரையில் சிறப்பாக செயல்படுவேன்.

தனக்கு ஆதரவு அளித்துள்ள ஒவ்வொருவருக்கும் இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT