இந்தியா

நாடு முழுவதும் 100 ஜிஎஸ்டி விழிப்புணர்வு மையங்கள்: இந்திய வர்த்தக சம்மேளனம் முடிவு

DIN

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து வர்த்தகர்களுக்கு விளக்கமளிப்பதற்காக, நாடு முழுவதும் 100 விழிப்புணர்வு மையங்களை அமைக்க அகில இந்திய வர்த்தக சம்மேளனம் (சிஏஐடி) முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறித்து வர்த்தகர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்தியா முழுவதும் 100 விழிப்புணர்வு மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இதற்காக, சுமார் 6 கோடி வர்த்தகர்களைச் சென்றடையும் வகையில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, டாலி சொல்யூஷன்ஸ், மாஸ்டர்கார்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.
முதல்கட்டமாக, அடுத்த மாதம் (ஜூலை) 1-ஆம் தேதி முதல் விழிப்புணர்வு முகாம்கள் செயல்படத் தொடங்கும். தற்போதைய வரி விதிப்பு முறையிலிருந்து, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு சுலமாக மாறுவதற்கான வழிமுறைகள் இந்த விழிப்புணர்வு மையங்களில் வர்த்தகர்களுக்கு சொல்லித் தரப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT