இந்தியா

சிறையில் கலவரம்: இந்திராணி முகர்ஜி உள்பட 200 பேர் மீது வழக்குப் பதிவு

DIN

சிறையில் கலவரத்தில் ஈடுபட்டதாக ஷீனா போரா கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட 200 பெண் கைதிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஷீனா போரா என்ற இளம்பெண் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவரது தாயாரும், தொழிலதிபருமான இந்திராணி முகர்ஜி, மகாராஷ்டிரத்தில் உள்ள பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு பெண் கைதி, கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். சிறை அதிகாரி ஒருவர் மஞ்சுவை கடுமையாக தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியறுத்தி பெண் கைதிகள் பலர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சிறையில் கலவரத்தில் ஈடுபட்டதாக 200 கைதிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் இந்திராணி முகர்ஜியும் ஒருவர் ஆவார். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT