இந்தியா

மீரா குமாருக்கு ஆதரவாக பிஜேடி எம்எல்ஏக்கள் அணி மாறி வாக்களிப்பர்: காங்கிரஸ் கருத்து

DIN

குடியரசுத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாருக்கு ஆதரவாக பிஜு ஜனதாதள எம்எல்ஏக்கள் பலர் அணி மாறி வாக்களிப்பர் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவளிக்கும் முடிவுக்கு அக்கட்சியின் மூத்த எம்.பி.க்கள் பர்துருஹரி மகாதப், ததகத் சத்பதி அதிருப்தி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்வரின் முடிவுக்கு பிஜு ஜனதாதள எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பலர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், அவர்கள் அணி மாறி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமாருக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என காங்கிரஸ் வட்டாரங்களில் ஊகமாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இதை உறுதிப்படும் விதமாக காங்கிரஸ் கட்சியின் பேரவைத் தலைமைக் கொறடா தார பிரசாத் பாஹிணிபதி புவனேசுவரத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிஜு ஜனதாதளம், சிவசேனை ஆகிய கட்சிகள் மட்டுமன்றி பாஜகவின் எம்.பி.க்கள் பலரும் மீரா குமாருக்கு வாக்களிப்பர். அதே போல பிஜு ஜனதாதள எம்எல்ஏக்கள் பலரும் கூட எதிர்க்கட்சிக்கு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பர். பாஜக கூட்டணி வேட்பாளருக்கு கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் ஆதரவு தெரிவித்தது குறித்து ஆளுங்கட்சியான பிஜு ஜனதாதள எம்எல்ஏக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து அவர்கள் தங்களுக்குள் விவாதித்து வருகின்றனர் என்றார் பாஹிணிபதி.
பிஜு ஜனதாதளம் மறுப்பு: எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமாருக்கு ஆதரவாக பிஜு ஜனதாதள எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பலர் அணி மாறி வாக்களிப்பதற்கு வாய்ப்பே இல்லை. இதில் காங்கிரஸ் கனவு பலிக்காது என்று பிஜு ஜனதாதள செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பிரசாந்த் நந்தா குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT