இந்தியா

200 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி தொடக்கம்

DIN

புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தொடங்கியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. அதற்கு பதிலாக புதிதாக ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டன. இந்நிலையில், ரூபாய் நோட்டுப் புழக்கத்தை எளிதாக்கும் வகையில் புதியதாக 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க முடியாத அளவுக்கு தனிச்சிறப்பு வாய்ந்த 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடைபெற்றன.
இந்நிலையில், அத்தகைய 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கிவிட்டது. இந்த புதிய ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் அதிகஅளவில் புழக்கத்தில் இல்லை என்ற குறையைப் போக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின்போது புழக்கத்தில் இருந்த கரன்சிகளில் 86 சதவீதம் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT