இந்தியா

உத்தரபிரதேச இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல்: நண்பகல் 12 மணி நிலவரப்படி 26% வாக்குப்பதிவு! 

PTI

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் ஏழாவது மற்றும் இறுதி கட்ட சட்டசபை தேர்தலில்  நண்பகல் 12 மணி நிலவரப்படி 26% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

எழு கட்டங்களாக நடைபெற்று வரும் உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.இதில் ஏழு மாவட்டங்களில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி மாநிலங்களவை தொகுதியிலுள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

வாரணாசியில் 23.76 சதவீத வாக்குகளும், நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள மிர்சாபூர் தொகுதியில் 26.63 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன,.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஓருவர், 'நண்பகல் 12 மணி நிலவரப்படி 26% வாக்குகள் பதிவாகியுள்ளது.தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.  

எழு கட்டங்களாக பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 11-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT