450 கிலோமீட்டர் சென்று தாக்கும் பிரமோஸ் ஏவுகணை: இந்தியா வெற்றிகர சோதனை!
450 கிலோமீட்டர் தொலைவு சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:42 PM
புதுதில்லி: 450 கிலோமீட்டர் தொலைவு சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா சில ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமாக சோதனை செய்தது. பின்னர் 'ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு குழுமத்தில்' இந்தியா ஜூன் 2016-ல் உறுப்பினரானது.
தற்போது அதனைத் தொடர்ந்து பிரமோஸ் ஏவுகணையின் இலக்கு தூரம் 450 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து இன்று காலை 11 மணி அளவில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் அறிவித்தனர்..
Advertisement