இந்தியா

குஜராத்: ஹார்திக் படேல் மீது வழக்குப்பதிவு

DIN

குஜராத் மாநில பாஜக நிர்வாகி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதாக படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வரும் ஹார்திக் படேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 59 பேர் மீது அந்த மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமூகவலைதளத்தில் வெளியிட்ட கருத்துக்காக ஹார்திக் படேலின் ஆதரவாளரான குணால் படேலை போலீஸார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஹார்திக் படேலும், அவரது ஆதரவாளர்களும், வஸ்தராலில் உள்ள பாஜக நிர்வாகி பரேஷ் படேலின் வீட்டுக்குள் திங்கள்கிழமை அதிகாலை புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
பரேஷ் படேலின் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய அவர்கள், பாஜக கொடியையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஹார்திக் படேல், அவரது ஆதரவாளர்கள் 59 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 11 பேரை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர். ஹார்திக் படேல் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். ஹார்திக் படேல் மீது ஆமதாபாத், சூரத் ஆகிய இடங்களில் இருக்கும் போலீஸ் நிலையங்களில் 2 தேச விரோத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT