தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் கடுமையான தண்டனை அளிக்க வகை செய்யும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும் விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அளித்த பதில்:
ஊடகங்களில் தவறான விளம்பரங்கள் வெளியாவதை ஒப்புக் கொள்கிறேன். அத்தகைய விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்கெனவே உள்ள சில சட்டங்களில் பல்வேறு பிரிவுகள் உள்ளன.
எனினும், அத்தகைய விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தங்கத்தில் ஹால்மார்க் எனப்படும் தர முத்திரையும், தங்கத்தை விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டியது இனி கட்டாயமாக்கப்படும் என்று பாஸ்வான் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.