இந்தியா

வருமான வரி தாக்கல், பான் கார்டுக்கு ஆதாரை கட்டாயமாக்க நடவடிக்கை

வருமான வரி கணக்குத் தாக்கல், பான் கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, நிதி மசோதாவில் திருத்தம் கொண்டு

DIN

வருமான வரி கணக்குத் தாக்கல், பான் கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, நிதி மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சமீபத்தில் வருமான வரித் துறை சார்பில் செல்லிடப்பேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவும், வரிப்பிடித்தம் எவ்வளவு திரும்பி வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று கூறப்பட்டது. அப்போதே, எதிர்காலத்தில் ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு பான் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இப்போது ஆண்டுதோறும் சராசரியாக 2.5 கோடி பேர் பான் கார்டு பெற விண்ணப்பித்து வருகின்றனர். நாட்டில் 25 கோடிக்கும் மேற்பட்டோர் பான் கார்டு வைத்துள்ளனர்.
111 கோடி பேருக்கு ஆதார் அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. புதிய சிம் கார்டு வாங்குதல், வங்கிக் கணக்குத் தொடங்குதல், பல்வேறு வகை மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதார் அடிப்படையிலான மின்னணுப் பணவர்த்தனையை அதிகரிக்கும் முயற்சியையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

EPS-ஐ வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளோம்!: டிடிவி! | செய்திகள்: சில வரிகளில் | 30.10.25

நெல் ஈரப்பத அளவு: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

நாக் அவுட் போட்டியில் சாதனை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீராங்கனை!

SCROLL FOR NEXT