இந்தியா

இது என்ன பள்ளிக்கூடமா? எரிச்சலான மக்களவை சபாநாயகர்!

நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு எரிச்சலான மக்களவை சபாநாயகர் ...

IANS

புதுதில்லி: நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு எரிச்சலான மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இது என்ன பள்ளிக்கூடமா? என்று கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றம் இன்று துவங்கியவுடன் பிரதமர் மோடியும் நிகழ்வுகளில் பங்கு பெற்றார் பல்வேறு துறை சார்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அமைதியான முறையில்பதில்கள் வழங்கப்பட்டன. அவை அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கேள்வி நேரம் முடிந்தவுடன் பிரதமர் மோடி அவையை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் அவையில் அங்கங்கே பேசிக் கொள்ளத் தொடங்கினர். இதன் காரணமாக அவையெங்கும் சப்தம் எழுந்தது.

உடனே சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உறுப்பினர்கள் தயவு செய்து அமைதியாக இருக்குமாறு வேண்டினார்.ஆனால் அப்போதும் தொடர்ந்து சப்தங்கள் நிலவியதால் எரிச்சலான சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இது என்ன பள்ளிக்கூடமா? என்று உறுப்பினர்ககளை நோக்கி கேள்வி எழுப்பினார். 

அவரின் இந்த வார்த்தைகளுக்குப் பிறகுதான் அவை அமைதியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT