முகப்பு
இந்தியா

ஜிசாட் செயற்கைகோளானது சார்க் நாடுகளுக்கு மிகுந்த பயனைத் தரும்: பிரதமர் மோடி!

இன்று மாலை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள ஜிசாட்-9 செயற் கைகோளானது சார்க் அமைப்பின் நாடுகளுக்கு மிகுந்த பயனைத் தரும் என்று இந்திய பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:27 PM
பகிர்:

புதுதில்லி: இன்று மாலை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள ஜிசாட்-9 செயற் கைகோளானது சார்க் அமைப்பின் நாடுகளுக்கு மிகுந்த பயனைத் தரும் என்று இந்திய பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஜிசாட் 9 செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி எஃப்09 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஜிசாட்-9 செயற்கோளானது சார்க் அமைப்பின் நாடுகளுக்கு மிகுந்த பயனைத் தரும் இந்த செயற்கைகோள்  சேகரிக்கும் தகவல்களானது சார்க் நாடுகளுடான் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த சாதனையின் காரணமாக சார்க் நாடுகள் அனைத்தும் அமைதி, வளர்ச்சி மற்றும் மனிதநேயம் ஆகிய விஷயங்களில் ஓன்றிணைந்து செயல்பட்டுள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →