இந்தியா

கேஜரிவால் பதவி விலக வலியுறுத்தி போராடுவேன்: ஹஸாரே உறுதி

'தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்பட்சத்தில், அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி போராட்டம் நடத்துவேன்'

DIN

'தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்பட்சத்தில், அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி போராட்டம் நடத்துவேன்' என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்தார்.
தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தனது அமைச்சரவை சகா ஒருவரிடமிருந்து ரூ.2 கோடியை லஞ்சமாக பெற்றதாக தில்லி முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா கடந்த சில நாள்களுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதன் மூலம் அடையாளம் காணப்பட்டு, தில்லி முதல்வராக உயர்ந்த அரவிந்த் கேஜரிவால் மீது இத்தகைய குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் விரைவில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கேஜரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
ஊழலுக்கு எதிராக என்னுடன் இணைந்து போராட்டம் நடத்தியவர் அரவிந்த் கேஜரிவால். தற்போது அவரே ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது கவலையளிக்கிறது. எனினும், கேஜரிவால் மீது புகார் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா, பதவியில் இருக்கும்போது எந்தப் புகாரும் தெரிவிக்காதது ஏன்? அவர் அமைச்சர் பதவி வகித்தபோதே இந்த ஊழல் நடந்திருக்கிறது என்றால், அப்போதே இதுகுறித்து அவர் அதிகாரிகளை எச்சரிக்காதது ஏன்? இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.
எனவே, இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இதில், கேஜரிவால் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில், அவர் பதவி விலக வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நான் போராட்டம் நடத்துவேன் என்றார் அண்ணா ஹஸாரே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT