இந்தியா

ஆந்திர அமைச்சரின் மகன் உள்பட இருவர் சாலை விபத்தில் சாவு

DIN

ஹைதராபாதில் மெட்ரோ ரயில் பாலத் தூணில் புதன்கிழமை அதிகாலை கார் மோதி நேரிட்ட விபத்தில், ஆந்திர அமைச்சர் பி.நாராயணாவின் 22 வயது மகனும், அவரது நண்பரும் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, காவல்துறை துணை ஆணையர் (மேற்கு மண்டலம்) ஏ.வெங்கடேஸ்வர் ராவ் கூறியதாவது:
ஆந்திர அமைச்சர் பி.நாராயணாவின் மகன் நிஷித்தும், அவரது நண்பர் ரவி வர்மாவும் (24), ஹைதராபாதின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் புதன்கிழமை அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தனர். காரை நிஷித் ஓட்டினார்.
அப்போது, ஒரு வளைவில் திரும்பியபோது, மெட்ரோ ரயிலுக்காக கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூணில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நிஷித்தும், ரவி வர்மாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதிவேகமாக ஓட்டியதால், நிஷித்தின் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாலத்தில் மோதி நசுங்கிய காரில் இருந்து, நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகே இருவரது உடல்களும் மீட்கப்பட்டன என்றார் வெங்கடேஸ்வர் ராவ்.
மேலும், குடிபோதையில் கார் ஓட்டியதால்தான் இந்த விபத்து நேரிட்டதாக வெளியான தகவல்கள் குறித்து, செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு, 'பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, எதையும் உறுதியாக கூற முடியும்' என்று அவர் கூறினார்.
இதனிடையே, ஹைதராபாதில் உள்ள மருத்துவமனையில் இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. நிஷித்தின் உடல், இறுதி சடங்குகளுக்காக நெல்லூருக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகப்பா அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

உளுந்து, எள், கடலை பயிா்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

கட்டுகுடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு

செட்டிநாடு உணவுப் பொருள்கள் விற்பனைத் திருவிழா

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சி

SCROLL FOR NEXT