இந்தியா

இந்திய எல்லையில் மீன்பிடித்த 6 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

DIN

குஜராத் மாநிலத்தில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியான சர் க்ரீக் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் மீனவர்கள் 6 பேரை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கட்ச் மாவட்டத்தில் உள்ள சர் க்ரீக் பகுதி கடலில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டோம். அப்போது, இந்திய எல்லைக்குள் 3 பாகிஸ்தான் படகுகள் இருப்பதைக் கண்டோம். எங்களை கண்டவுடன் 2 படகுகளில் இருந்த மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பிச் சென்றனர். எஞ்சியுள்ள ஒரு படகில் இருந்த 6 மீனவர்களைக் கைது செய்தோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
சர் க்ரீக் பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை பாகிஸ்தான் மீனவர்கள் அவ்வப்போது மீறி வருகின்றனர்.
பிஎஸ்எஃப் வீரர்களை மீனவர்கள் கண்டவுடன் கடலில் குதித்து அவர்கள் நாட்டு எல்லைக்குள் நீந்தியே சென்றுவிடுகின்றனர்.
இதன் காரணமாக சர் க்ரீக் பகுதியில் ஆளில்லாமல் மிதந்து கொண்டிருந்த படகுகள் சிலவற்றை பிஎஸ்எஃப் வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT