ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய காவல் நிலையங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
திருப்பதி, ஏர்பேடு, குண்டூர், சித்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள காவல் நிலையங்களின் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் இணையதள சேவையை முடக்கியவர்கள் குறித்து திருப்பதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இணையதள சேவையை முடக்கியவர்கள், அதனை மீண்டும் சரிசெய்வதற்கு பணம் கேட்டு போலீஸாருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக திருப்பதி மேற்கு காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.