இந்தியா

அனில் மாதவ் தவே மரணம் அதிர்ச்சியளிக்கின்றது: பிரதமர் மோடி இரங்கல்

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே உடல் நலக்குறைவால் இன்று தில்லியில் காலமானார். இந்நிலையில், அனில் மாதவ் தவே உயிரிழந்ததற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ANI

புது தில்லி: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே உடல் நலக்குறைவால் இன்று தில்லியில் காலமானார். இந்நிலையில், அனில் மாதவ் தவே உயிரிழந்ததற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
நண்பர் அனில் மாதவ் தவேயின் மரணத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நேற்று மாலை வரை கொள்ளை சிக்கல் குறித்து என்னுடன் பேசி வந்தார் தவே.

60 வயதாகும் அனில் தவே  திருமணம் செய்து கொள்ளவில்லை. இளமை பருவம் முதலே அரசியலில் ஈடுபட முழு ஆர்வத்துடன் செயல்பட்டவர். சுற்றுச்சூழலைக் கவனித்து வந்ததில் தனிக்கவனம் செலுத்தி வந்த தவேயின் பணி என்றும் மறக்க முடியாதது.

பாரதிய ஜனதா கட்சியில் இருந்த இவர் முழு கவனத்துடனும், தெளிவுடனும் செயல்பட்டவர். இவரைப் பிரிந்து வாழும் இவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT