இந்தியா

காஷ்மீர் இளைஞரை ஜீப்பில் கட்டிச் சென்ற ராணுவ அதிகாரிக்கு விருது

DIN

ஜம்மு - காஷ்மீரில் போராட்டக்காரர்களின் கல்வீச்சில் இருந்து தப்பிக்க இளைஞர் ஒருவரை ஜீப்பின் முன் பகுதியில் கட்டிச் சென்ற பாதுகாப்புப் படை அதிகாரிக்கு ராணுவத்தின் சிறப்பு விருது (கமெண்டேசன் கார்டு) வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது அவரது சிறப்பான செயல்பாடு, பொறுப்புணர்வுக்காக வழங்கப்பட்டதாக ராணுவம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் இளைஞர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. மேலும், ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கலவரக்காரர்களின் கல்வீச்சிலிருந்து தப்பிப்பதற்காக காஷ்மீர் இளைஞர்களை மனிதக் கேடயமாக ராணுவ வீரர்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை மெய்ப்பிக்கும் விதமாக, காஷ்மீரில் ராணுவ ஜீப்பின் முன்பகுதியில் இளைஞர் ஒருவரை கட்டிவைத்து அழைத்துச் செல்வது போன்ற விடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் செயலில் மேஜர் லீதுல் கோகோய் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேஜர் லீதுல் கோகோய்க்கு ராணுவத்தில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விருது வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத், கடந்த வாரம் அவருக்கு இந்த விருதை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT