முகப்பு
இந்தியா

ரஜினியை அரசியலுக்கு வருமாறு நான் அழைக்கவில்லை: பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா பேட்டி!

ரஜினியை அரசியலுக்கு வருமாறு நான் அழைக்கவில்லை என்று பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:36 PM
பகிர்:

அகமதாபாத்: ரஜினியை அரசியலுக்கு வருமாறு நான் அழைக்கவில்லை என்று பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கட்சி நிகழ்வு ஒன்றிக்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்திருந்த பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது 

நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு நான் அழைக்கவில்லை. ஒருவேளை அவர் வந்தால் நான் வரவேற்பேன் என்றுதான் கூறினேன். அதுபோல அவரை பாரதிய ஜனதா கட்சியில் சேருமாறு நான் அழைப்பு  எதுவும் விடுக்கவில்லை. அரசியலில் இணைவது என்பது அவரது தனிப்பட்ட முடிவு.

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.  

முழு கட்டுரையைப் படிக்க →