இந்தியா

சட்டவிரோத ஆயுத தொழிற்சாலைக்கு சீல்: 3 பேர் கைது

DIN

உத்தரப் பிரதேச மாநிலம், லகிம்பூர் கேரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த ஆயுதத் தொழிற்சாலையை கண்டறிந்து போலீஸார் சீல் வைத்தனர். இதுதொடர்பாக 3 பேரை அவர்கள் கைது செய்தனர்.
இதுகுறித்து லகிம்பூர் கேரி மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் எஸ்.சன்னப்பா கூறியதாவது:
தௌராஹர் கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பாய்ந்தோடும் கக்ரா ஆற்றையொட்டி சட்டவிரோதமாக ஆயுதத் தொழிற்சாலை இயங்கி வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அந்தப் பகுதியில் வியாழக்கிழமை இரவு தனிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. சட்டவிரோதமாக இயங்கிவந்த அந்த தொழிற்சாலையை அவர்கள் கண்டறிந்தனர். அப்போது அங்கிருந்த 7 நாட்டுத் துப்பாக்கிகள், துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்கான பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் சன்னப்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT