இந்தியா

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: மத்திய அரசு அறிவிப்பு! 

DIN

புதுதில்லி: இனி நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பது தடை செய்யப்படுவதாக மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்  இன்று புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வது உடனடியாக தடை செய்யப்படுகிறது. இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும்.

இனி கசாப்பு தொழிலுக்காகவோ, இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம், காளை, எருமை மாடு உள்ளிட்ட விலங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. தற்பொழுதுஅமல்படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறை மூலம், நாடு முழுவதும் உள்ள மாட்டிறைச்சி விற்பனை கூடங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள மிருகவதை தடுப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வந்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT