இந்தியா

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய வசதி

DIN

குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாக பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான புதிய வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மேலும், வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறைகளை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை வருமான வரித் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கென பிரத்யேக இணைப்பை வருமான வரித் துறை உருவாக்கியது.
அந்த இணைப்பில் வருமான வரி செலுத்துவோர் சென்று, தங்கள் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவிட்டாலே போதுமானது. சிறிது நேரத்தில் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டது உறுதி செய்யப்படும். ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை ஆகியவற்றில் உள்ள சிறிய பெயர் மாற்றங்களும் இதில் தாமாக சரிசெய்யப்பட்டு விடும்.
குறுஞ்செய்தி வசதி: இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை மேலும் எளிமையாக்கும் விதமாக, குறுஞ்செய்தி வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விளம்பரங்கள், பிரபல நாளிதழ்களில் புதன்கிழமை வெளியாகியுள்ளன. அந்த விளம்பரங்களில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி, செல்லிடப்பேசியில்UIDPAN என்று டைப் செய்து இடைவேளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணையும், அதன் பிறகு மீண்டும் இடைவேளி விட்டு 10 இலக்க பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும். இந்தத் தகவலை 567678 அல்லது 56161 என்ற எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினாலே பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் அட்டையிலும், ஆதார் அட்டையிலும் ஒரே மாதிரியான பெயர் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்தக் குறுஞ்செய்தி வசதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT