முகப்பு
இந்தியா

அக்ஷர்தாம் கோயில் விழாவில் பங்கேற்றார் மோடி

குஜராத் மாநிலம் காந்திநகரில் அமைந்துள்ள அக்ஷர்தாம் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வெள்ளி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

குஜராத் மாநிலம் காந்திநகரில் அமைந்துள்ள அக்ஷர்தாம் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வெள்ளி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
குஜராத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் பிரசாரத்தில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியைத் தக்க வைப்பதற்காக பாஜக தலைவர்கள் முழுமூச்சில் களமிறங்கியுள்ளனர். அதே வேளையில், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஆட்சியைப் பிடித்து, பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க காங்கிரஸ் மும்முரமாக உள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தில் உள்ள கோயில்களுக்கு அண்மையில் சென்று வழிபாடு நடத்தியதோடு, பாஜகவை எதிர்த்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரில் அமைந்துள்ள அக்ஷர்தாம் கோயிலில் நடைபெற்ற வெள்ளி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், சுவாமிநாராயண் சன்ஸ்தா அமைப்பின் தற்போதைய தலைவரான மஹந்த் சுவாமி மஹராஜுடன் இணைந்து வழிபாடுகளை மேற்கொண்டார். இதனிடையே, விழாவில் மோடி பேசியதாவது:
சுவாமிநாராயண் அமைப்பை பாடிதார் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பின்பற்றுகின்றனர். படேல் சமூகத்தினர் பாரம்பரியமாக பாஜகவுடனே இருந்து வருகின்றனர். எனினும் அவர்களில் ஒரு பிரிவினர் அண்மையில் இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டம் காரணமாக எங்கள் கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.
இந்த அமைப்பின் தலைவராக விளங்கிய, மறைந்த பிரமுக் சுவாமி மஹராஜ் தனது வாழ்நாளில் சுமார் 1200 கோயில்களைக் கட்டியுள்ளார். அவை வெறும் கல் கட்டடங்கள் அல்ல; மாறாக அவை கலாசார மற்றும் ஆன்மிக ஞானமளிக்கும் மையங்களாகத் திகழ்கின்றன.
இந்த அமைப்புக்கு நவீன நிர்வாகத்தைக் கொண்டுவந்துள்ள அவர் அனைத்துத் திட்டங்களையும் குறித்த காலத்தில் நிறைவேற்றும் வழக்கம் உடையவர் ஆவார்.
நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, இந்த அமைப்பின் துறவிகளை நான் அழைத்து, திட்டங்களை உரிய நேரத்தில் முடிப்பது எப்படி என்பது குறித்து அதிகாரிகளிடையே உரை நிகழ்த்துமாறு கேட்டுக் கொண்டேன். அரசுகள் திட்டங்களை தாமதப்படுத்துவதற்கு பெயர் பெற்றவை. அதற்கு நர்மதை அணைத் திட்டம் ஒரு சரியான உதாரணம் என்றார் மோடி.

முழு கட்டுரையைப் படிக்க →