இந்தியா

சாலை வசதி இல்லாததால் உயிருக்குப் போராடிய தாயையும், சேயையும் 8.கி.மீ தூரம் தூக்கிச் சென்ற மருத்துவர்! (வீடியோ)

DIN

ஒடிசாவில் உள்ள மால்கங்காரி பகுதியில் சரியான மருத்துவ வசதியும், சாலை வசதியும் இல்லாததால் உயிருக்குப் போராடிய கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் அவர்கள் இருவரையும் 8.கி.மீ தூரத்திற்குக் கட்டிலில் வைத்து தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியில் துடித்த பெண்ணை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிரமத்திற்குள் வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது, அதனால் ஓம்கர் ஹோட்டா மருத்துவமனையைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர் தனது உதவியாளருடன் கிராமத்திற்குள் சென்று அந்தப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளார். ஆனால் பிரசவத்திற்கு பிறகு ரத்த போக்கி நிற்காததால் தாயையும், குழந்தையையும் கயிற்று கட்டிலில் வைத்து 8 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இப்போது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பல மருத்துவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ள இந்தச் சம்பவம் இன்னமும் இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் அடிப்படை வசதிகளான மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதிகள் கூட இல்லாமல் துன்பப்படுவதை காட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT