முகப்பு
இந்தியா

டிச.18-ல் விஜய் மல்லையா நேரில் ஆஜராக தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

அந்நியச் செலாவணி முறைகேடு தொடர்பாக டிசம்பர் 18 விஜய் மல்லையா நேரில் ஆஜராக தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 8 நவம்பர், 2017 at 4:33 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:34 PM

அந்நியச் செலவாணி முறைகேடு வழக்கில் விஜய் மல்லையாவை குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தாக்கல் செய்தது.

இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பிணையம் இல்லாத வாரன்ட் பிறப்பித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுபோன்று விஜய் மல்லையா மீது இதே வழக்குத் தொடர்பாக 6 முறை வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்த வழக்கு தொடர்பாக அடுத்த 2 மாதங்களில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கும் தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

இந்நிலையில், அந்நியச் செலவாணி முறைகேடு செய்த இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 18-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தவறும் பட்சத்தில் இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக விஜய் மல்லையா அறிவிக்கப்படுவார் என்றும் எச்சரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.