முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு

மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம், மாநிலங்களவை எம்.பி.யாக, வியாழக்கிழமை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம், மாநிலங்களவை எம்.பி.யாக, வியாழக்கிழமை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு, கடந்த ஆகஸ்ட் மாதம் குடியரசு துணைத் தலைவர் ஆனார். அதையடுத்து, காலியாக இருந்த அந்த இடத்துக்கு வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், அண்மையில் மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்ற அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை. எனவே, அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக, ராஜஸ்தான் சட்டப் பேரவைச் செயலர் பிருத்விராஜ், ஜெய்ப்பூரில் கூறினார்.
அப்போது, பேரவை விவகாரங்கள் செயலர் ராஜேந்திர ரத்தோர், மாநில அமைச்சர் அருண் சதுர்வேதி, பாஜக மாநிலத் தலைவர் அசோக் பர்னாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →