இந்தியா

தகராறு செய்த வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய உணவக உரிமையாளர்! 

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில், உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளர் மீது  சாலையோர உணவு கடை உரிமையாளர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

DIN

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில், உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளர் மீது  சாலையோர உணவு கடை உரிமையாளர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவினை பகிர்ந்திருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரா தானே நகரில் சாலையோர உணவகம் ஒன்றில் கடை உரிமையாளருக்கும் அவரது கடைக்கு வந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது கடை உரிமையாளர் மீது அந்த வாடிக்கையாளர்கள் எதனையோ வீசுகிறார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அடுப்பில் கொதிக்கும் எண்ணெயை எடுத்து அவர்கள் மீது ஊற்றுகிறார். அத்துடன் விடாமல் தொடர்ந்து எண்ணெயை பாத்திரம் ஒன்றில் எடுத்துக் கொண்டு அவர்களைத் துரத்தி ஓடுகிறார். இந்தக் காட்சி அந்த உணவகத்தின் அருகில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடியோ காட்சியானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT