இந்தியா

சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கினால் மட்டும் பத்மாவதி திரைப்படத்துக்கு அனுமதி: உ.பி. துணை முதல்வர்

தினமணி

சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கினால் மட்டுமே பத்மாவதி திரைப்படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மெüரியா தெரிவித்துள்ளார்.
 பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி திரைப்படத்தில் ராஜபுத்திர ராணி பத்மாவதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இப்படத்தை ராஜபுத்திர சமூகத்தினரும், ஹிந்து அமைப்புகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
 இந்நிலையில் இது தொடர்பாக உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மெüரியா கூறியதாவது:
 முஸ்லிம் மன்னரிடம் சரணடையாமல் தனது உயிரை தீயில் மாய்த்துக் கொண்டு, கண்ணியத்தைக் காத்தவர் ராணி பத்மாவதி. ஆனால், இஸ்லாமிய ஊடுருவல்காரர்கள் இது தொடர்பாக தவறான செய்திகளைப் பதிவு செய்தனர். ராணி பத்மாவதி தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால் மட்டும் அப்படத்தை உத்தரப் பிரதேசத்தில் திரையிட அனு
 மதி வழங்குவோம் என்றார் அவர்.
 தீபிகா உயிருக்கு ரூ.1 கோடி: இதனிடையே, அத்திரைப்படத்தில் ராணி பத்மாவதியாக நடித்த பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் எரிப்பவர்களுக்கு ரூ.1 கோடி தரப்படும் என்று அகில பாரதிய ஷத்ரிய மகா சபை என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT