இந்தியா

தொடர் சர்ச்சை எதிரொலி: "பத்மாவதி' திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு

தினமணி

தொடர் சர்ச்சை எதிரொலியாக, "பத்மாவதி' திரைப்படத்தின் வெளியீட்டை அதன் தயாரிப்பு நிறுவனம் ஒத்தி வைத்துள்ளது.
 "பத்மாவதி' திரைப்படத்தை அதன் தயாரிப்பு நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தது. இந்நிலையில், அந்தப் படத்தில் ராஜபுத்திர அரசி பத்மாவதியை அவமதிக்கும் வகையில் கருத்துகள் இருப்பதாக தெரிவித்து, வடமாநிலங்களில் ராஜபுத்திர சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 மத்திய திரைப்பட தணிக்கை வாரியமும், அந்தப் படத்துக்கு தனது ஒப்புதலை அளிக்காமல், தொழில்நுட்பக் காரணங்களை சுட்டிக்காட்டி தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பி வைத்தது. இதுபோல், "பத்மாவதி' திரைப்படத்தில் பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்த ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே, படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கும் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுபோல், பத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக அடுத்தடுத்து பிரச்னை கிளம்பியதையடுத்து, அந்தப் படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனமான வயாகாம் 19 மோஷன் பிக்சர்ஸ் ஒத்தி வைத்துள்ளது.
 இதுகுறித்து பிடிஐ செய்தியாளருக்கு அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், "தானாக முன்வந்தே, பத்மாவதி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை டிசம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து எங்கள் நிறுவனம் ஒத்தி வைத்துள்ளது; திரைப்படத்துக்கான வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியிடப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT