இந்தியா

சபரிமலைக்குப் போகும் பக்தரா நீங்கள்? உங்கள் புகைப்படம் அஞ்சல் தலையில் இடம்பெற வாய்ப்பு

DIN

சபரிமலைக்கு வரும் பக்தர்களின், இருமுடியுடன் கூடிய புகைப்படம் ஐந்து ரூபாய் அஞ்சல் தலையில் இடம்பெறும் வகையில் புதிய வசதியை சபரிமலை அஞ்சல் அலுவலகம் ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் மண்டல பூஜை மஹோத்ஸவம் நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மண்டல பூஜை டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. பின்னர் மகர விளக்கு மஹோத்ஸவம் டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20 ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஜனவரி 14 ஆம் தேதி மகர விளக்கு தரிசனம் நடைபெறுகிறது.

இந்த 3 மாதங்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி சூடி, ஐயப்பனை தரிசனம் செய்வர். பல்வேறு நிறுவனங்களும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு உதவிகளை விழாக் காலங்களில் செய்வதுண்டு. விழா நடைபெறும் 3 மாத காலங்களிலும் பக்தர்களின் தகவல் தொடர்புக்காக அஞ்சல் துறை சார்பில், சபரிமலை சன்னிதானத்தில் அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வழக்கமான அஞ்சல் சேவைகள் வழங்கப்படுவதுடன், அனைத்து வகை செல்லிடப்பேசி ரீசார்ஜ் அட்டைகளும் விநியோகிக்கப்படுவதாக அஞ்சல் நிலைய அலுவலர் ஐயப்பன் தெரிவித்தார்.

புது முயற்சி: இதற்கிடையே, சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்களை கெளரவிக்கும் வகையில், அவர்களின் படங்களை அஞ்சல் தலையாக வெளியிட சபரிமலை சன்னிதான அஞ்சல் அலுவலகம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சன்னிதானத்தின் முன்பு இருமுடியுடன் நிற்கும் பக்தரின் படம் அஞ்சல் துறை அலுவலரால் எடுக்கப்பட்டு அவர்களுக்கு உடனடியாக ரூ. 5 மதிப்பு கொண்ட அஞ்சல் தலையாக வழங்கப்படுகிறது.

 ரூ. 300 செலுத்தி 5 ரூபாய் அஞ்சல் தலைகள் 12-ஐ பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அஞ்சல் அலுவலகம் திறந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு 91-4735202130 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT