இந்தியா

எல்லையில் பாக். ராணுவம் 600 முறை அத்துமீறித் தாக்குதல்

DIN

பாகிஸ்தான் ராணுவம் நிகழாண்டில் கடந்த 30-ஆம் தேதி வரை எல்லையில் 600 முறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாகிஸ்தான் ராணுவத்தினர் நிகழாண்டில் கடந்த மாதம் 30-ஆம் தேதி வரை எல்லைப் பகுதியில் 600 முறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 16 ராணுவ வீரர்களும், அப்பாவி பொதுமக்கள் 8 பேரும் உயிரிழந்துவிட்டனர்.
நிகழாண்டில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம். கடந்த ஆண்டில் மொத்தம் 450 முறை அந்நாட்டு ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்களில் 13 பேரும், 13 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையே கடந்த 2003-ஆம் ஆண்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT