இந்தியா

திருமலை மலைப்பாதைகளில் சென்னை ஐ.ஐ.டி. நிபுணர் குழு ஆய்வு

DIN

திருமலையில் உள்ள மலைப்பாதைகளில் சென்னையைச் சேர்ந்த ஐ.ஐ.டி நிபுணர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருமலையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதையின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் தேவஸ்தானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, திருமலை மலைப்பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படும் இடங்களில் சென்னை ஐ.ஐ.டி. விரிவுரையாளர் கே.வி.ராவ் தலைமையிலான நிபுணர் குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 
இக்குழுவினர் சனிக்கிழமை முதல் திருமலையில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் மலைப்பாதைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், பாறைகள் பலவீனமாக உள்ள பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேவஸ்தானம் 
தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT