இந்தியா

ஹிமாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்

Raghavendran

ஹிமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டேர் அளவில் 4.4 ஆகப் பதிவானது.

அதுபோல மற்றொரு மாவட்டமான சம்பாலில் வெள்ளிக்கிழமை மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டேர் அளவில் 3.7 ஆகப் பதிவானது.

மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. 

இருப்பினும் நிலநடுக்கம் காரணமாக பொருட்சேதம் அல்லது உயிர்ச்சேதம் எதவும் ஏற்படவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஹிமாச்சலப் பிரதேசத்தின் இதே சம்பால் பகுதியில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் இதே ரிக்டேர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

ஒரு மாதத்தில் இரண்டு முறை ஹிமாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

SCROLL FOR NEXT