இந்தியா

உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக யாராவது மேல்முறையீடு செய்தால் அந்த வழக்கில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று

DIN


புதுதில்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக யாராவது மேல்முறையீடு செய்தால் அந்த வழக்கில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் வரும் நவம்பர் 17 -ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரியோ, அல்லது உயர்நீதிமன்ற உத்தரவில் மாற்றம் கோரியோ யாராவது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், அதில் தங்களையும் சேர்க்க வேண்டும்.

தங்கள் தரப்பை கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் சிக்கலில் உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயங்குவதால், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில்
கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

SCROLL FOR NEXT