இந்தியா

புவனேஸ்வரில் மேம்பாலம் இடிந்து விழுந்து 2 பேர் பலி: 12 பேர் காயம்

DIN

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பொமிக்கல் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மேம்பாலம் பல அடி ஆழத்திற்கு தரையிறங்கியது. பாலம் மீது வேலை செய்து வந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கீழே விழுந்தனர், அபேபாது மோட்டார் சைக்கிளில் தனது மகளுடன் வந்த சத்யஜித் பட்நாயக்(45) பாலத்தின் இடிபாடுகளில் சக்கி உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலருக்கும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மீட்பு குழுவினர், ஒடிசா டிராஸ்டர் ரேபிட் ஆப்பரேஷன் ஃபோர்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2012 -ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டும், ஆனால், நில கையகப்படுத்துவதில் ஏற்பட்ட  தாமதத்தினால் பாலத்தை கட்டி முடிப்பதற்கான காலமும் தள்ளிபோனது.

இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்குள் பாலம் கட்டி முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று இடிந்து விழுந்துள்ளது.

பலாத்தின் கட்டுமான பணி உள்ளூர் நிறுவனமான பாண்டா என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக இரண்டு பொறியாளர்கள் இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது. விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT